தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று 47ஆவது பிறந்த நாள் காண்கிறார். அவருக்கு அமைச்சர்கள் அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் அவரது துறையை குறிப்பிட்டு காட்டும் வகையில் "Happy Birth Day மின்சார கண்ணா" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் திமுக கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் புகைப்படம், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர்க்கொத்து அளித்த படம், திமுக இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம்