கோவை அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோயில் உள்ள நிலையில் அதனை புனரமைத்தும் அதே கிராமத்தில் புதியதாக ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலும் கட்டப்பட்டது. இதனையடுத்து இந்த ஆலயங்களில் ஒன்றாக மகா கும்பாபிஷேகம் விழா நடத்த திட்டமிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கி, அதனைத்தொடர்ந்து அம்மன் அழைப்பு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இதனையடுத்து கோயிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து இன்று காலை செல்வவிநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் யாக சாலையில் இருந்து எடுத்துவரப்பட்டு விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு ஊர்மக்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மதுரை மல்லிகை பூவின் விலை ரூ.600 ஆக சரிவு