பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் கிளை வாய்க்கால் பகுதிகளில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2020 -2021ஆம் ஆண்டின் குடிமராமத்து திட்டப் பணிகள் சட்டப்பேரவை துணை தலைவர் தொடங்கிவைத்தார்.
பின்னர்,சமத்தூர் ராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.1 கோடியும், அரசு பொது நிதி ரூ. 7.5 கோடியும் ஒதுக்கப்பட்டு கட்டட பணிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு கலைக்கல்லூரியில் தற்போது உள்ள பாடப்பிரவுகளுடன் மேலும் பல பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும். தற்போது கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அரசு சிறப்பாக செய்துவருவதை பொருத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா பரிசோதனை கருவிகள் குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி வருகிறார்.
திமுகவை பொருத்தவரை பிரசாந்த் கிஷோர் பாண்டே முக்கியமான நிழல் தலைவராகவும், ஸ்டாலின் அவர் ஆட்டி வைக்கும் பொம்மையாக செயல்படுகிறார். இரட்டை தலைமையில் கீழ் திமுக செயல்பட்டுவருவதால் மூத்த பொறுப்பாளர்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறி அதிமுகவில் விரைவில் இணைவார்கள் என தெரிவித்தார்.