கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமநல்லூர் கிராம பேருந்து நிலையம் அருகே ஆலமரம் ஒன்று இருந்தது. சுமார் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மரத்தின் நிழலில் பேருந்துக்காக பயணிகள் காத்திருப்பது வழக்கம்.
இந்நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆலமரத்தை வெட்டி கடத்துவதாக வருவாய் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த காஜா என்பவர் மரம் வெட்டுவதற்காக ஆட்களை வரவழைத்து, அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டியபர்கள் மீது கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வருவாய் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இலங்கையிலிருந்து நண்பனை பார்க்க வந்தவர் கைது!