ETV Bharat / state

சுங்கத்துறை அதிகாரியிடம் பெண் பயணி வாக்குவாதம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Chennai Airport: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி மற்றும் பெண் பயணி இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கத்துறை அதிகாரியிடம் பெண் பயணி வாக்குவாதம்
சென்னை விமான நிலையம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 9:51 AM IST

Updated : Dec 14, 2023, 10:26 AM IST

சுங்கத்துறை அதிகாரியிடம் பெண் பயணி வாக்குவாதம்

சென்னை: வெளி நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவர் தனது உடமைகளுடன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனத்தில் அமர்ந்திருந்த நிலையில், அங்கு வந்த சென்னை விமான நிலைய புலனாய்வு அதிகாரி, பெண் பயணியின் உடமைகளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், அந்த பெண் பயணி நான் டிரான்சிட் பயணி, என்னுடைய உடமைகளை சோதனை செய்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே, நான் தனது உடமைகளை சோதனை செய்ய அனுமதிக்கவும் மாட்டேன், பிக்கப் வாகனத்திலிருந்து இறங்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், சுங்க துறை அதிகாரிக்கும், பெண் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுங்க அதிகாரி, பிக்கப் வாகனத்தில் இருந்த பெண் பயணியின் உடமைகளை கீழே இறக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கடுமையானது. இதனைப் பார்த்த சக பயணிகள் அந்த பெண் பயணிக்கு ஆதரவாக, சுங்க அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதனைத்தொடர்ந்து, சுங்க அதிகாரி வலுக்கட்டாயமாக, அந்த பெண் பயணியின் உடமையை எடுத்துச் சென்று பரிசோதித்து, திரும்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பெண் பயணி தான் விமான பைலட்டிடம் புகார் அளிப்பேன் என்று கூறினார்.

சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண் பயணிகளுக்கு இது போன்று இடையூறு ஏற்படுவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளில் பலர், சென்னை விமான நிலையத்தை தவிர்த்து, பெங்களூர், கொச்சி, திருச்சி, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி மற்றும் பெண் பயணி இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை கூறுகையில், “இந்த வீடியோ சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அந்த பெண் பயணி டிரான்சிட் பயணி. ஆனால், அவரது உடைமைகள் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் அதிக கூடுதல் எடையுடன் இருந்தது. எனவே, சுங்க அதிகாரி அவரது உடைமைகளின் லக்கேஜில் கடத்தல் பொருட்கள் ஏதாவது இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தினர்.

மேலும், பயணிகளின் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், டிரான்சிட் பயணிகள் உட்பட யாரையும் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அதிலும், அனுமதிக்க பட்ட எடையை விட, பல மடங்கு அதிகமான எடையில், லக்கேஜ் உள்ள நிலையில் நிச்சயமாக பரிசோதிப்போம். அந்தப் பெண் பயணி சுங்க அதிகாரியை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்துள்ளார். எனவே, சுங்க அதிகாரி மீது தவறு எதுவும் இல்லை” என்று கூறினர்.

இதையும் படிங்க: அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.. வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - முன்பதிவு இன்று தொடக்கம்!

Last Updated : Dec 14, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.