ETV Bharat / state

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பை வழங்கிய ஆட்சியர்!

கோவை: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பிலிருந்து ஒரு லட்ச ரூபாயை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.

covai collector given one lakh cheque for chief minister relief fund due to corona virus

author img

By

Published : Apr 8, 2020, 4:01 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், தொழில் துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்களது பங்களிப்பினை பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வழங்கினார்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பை வழங்கிய கோவை ஆட்சியர்

இதுவரை கோவை மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 6.4 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கரோனா நிதியாக வழங்கப்படும்- அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.