கோவையில் போக்குவரத்து விதிமீறல்கள் தடுப்பு, உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள ட்ரோன் கேமராக்களை பயன்படுத்துவது குறித்து காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முகாமை துவக்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தனிப்படை போலீசாரின் விசாரணை ஆவணங்கள் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: EWS 10% இட ஒதுக்கீடு: வரும் நவ.12-ல் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டம்