கரோனா வைரஸ் எனப்படும் 2019-nCoV காரணமாக சீனாவில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது தொற்றுநோய் என்பதால், அனைத்து நாடுகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
இந்நிலையில் இன்று சீனாவிலிருந்து எட்டு பேர் கோவைக்கு வந்தனர். இவர்கள் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டனர். இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சீனாவிலிருந்து கோவைக்கு எட்டு பேர் வந்துள்ளனர். அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் அது போன்ற பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும் “பொதுமக்கள் நலனுக்காக அவர்கள் எட்டு பேரும் சில நாள்கள் பொது இடங்களுக்கு செல்லவோ, மக்களுடன் அதிகம் பேசவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையைப் பொறுத்தவரை இந்த வைரஸ் தாக்குதல் இல்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க...கரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் இந்தியர்களை கண்டறிவதில் சிக்கல்!