கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் யாரும் பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கேரளாவில் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. திரையரங்குகள், மால்கள், போன்றவையும் மூடபட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவையிலும் இன்றிலிருந்து திரையரங்குகள், மால்கள் போன்றவை மூடப்படும் என்று அரசு தரப்பில் கூறபட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கோவையின் முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலமும் இன்று முதல் ஒரு வார காலம் மூடப்படுவதாகதாகவும், கேரள எல்லைப் பகுதிகளிலிருந்து வரும் அனைத்து பேருந்துகள், பயணிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மூலம் கொரோனா விழிப்புணர்வு!