கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்க்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து. அவர் அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற இருந்த நிகழ்வுகள் பயிற்சி ஆட்சியர் தலைமையிலோ அல்லது வருவாய் அலுவலர் முன்னிலையிலோ நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் ( ஜனவரி 26 ) குடியரசு தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். நேற்று ( ஜனவரி 27 ) அவரது நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 28 ஆயிரத்து 515 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருவது தெரிகிறது.
![கோவை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-covid-positive-collector-photo-script-tn10027_28012022101737_2801f_1643345257_320.jpg)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,51,209 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நேற்று 19.59 சதவீதம் இருந்த நிலையில் இன்று 15.88 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.