கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், மக்கள் தங்கள் அறியாமையிலும், அலட்சியத்திலும் வெளியே சுற்றித்திரிந்துவருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சூலூர் பகுதியில் காவல்துறை, பேரூராட்சி இணைந்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்வில், பள்ளி குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் வழியாக, கரோனா வைரஸிடமிருந்து, மக்கள் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டுமென செய்து காண்பித்தனர். அதிலொருவர், நரகத்திலிருக்கும் அசுரர்களை போல் வேடம் அணிந்து, பெருந்தொற்று குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் புலிக்கு கரோனா தொற்று!