கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கப்பினிபாளையம் முதல் பெரியகளந்தை இணைப்புச் சாலை வரை உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு நேற்று (ஆக. 25) பூமி பூஜை நடைபெற்றது. இதற்குச் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி பணிகளைத் தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கிய அவர், அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான முத்து கருப்பண்ணசாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் டீ.எல். சிங், ஒன்றியக்குழுத் தலைவர் நாகராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே பசுமையான சோலையாக மாறிய அரசு பள்ளி வளாகம்!