ETV Bharat / state

நில மோசடி - மூன்று பேர் மீது புகார்

author img

By

Published : Jan 22, 2020, 5:26 PM IST

கோயம்புத்தூர்: நிலம் வாங்கியவருக்கு கிரையம் செய்து தராமல் மோசடி செய்த காவல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நில மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார்
நில மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார்

இதுகுறித்து கோயம்புத்தூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

’பீளமேடு பாலன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவருக்கும் காந்திபுரத்தில் தேஜஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரும், காவல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்குமார் என்பவருக்கும் முன்னரே அறிமுகம் உள்ளது.

அதன் பேரில், செந்தில்குமாருக்கு சொந்தமான அன்னூர் கணுவக்கரை கிராமத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட வீட்டுமனைகள் லேஅவுட் பிரிவிலிருந்து இரண்டு மனைகளை விஜயகுமார் வாங்கியுள்ளார். இதற்காக விஜயகுமார் முன்பண தொகையாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதை தன் கூட்டாளி ஈஸ்வரன் பெயரில் வாங்கி செந்தில்குமார் வரவு வைத்துள்ளார்.

பின்னர்,செந்தில்குமார் தனக்கு சொந்தமான ஐஸ்வர்யம் கார்டன் என்ற மனையிடத்தில் 78, 79 ஆகிய மனைகளை ஒதுக்கி, இரண்டுக்கும் சேர்த்து மாதம் 7ஆயிரத்து 550 ரூபாய் வீதம் 36 மாதங்களில் 2 லட்சத்து 91ஆயிரத்து 800 ரூபாயை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டு விஜயகுமாருக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார்.

நில மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார்
நில மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார்

விஜயகுமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முழு தொகையை செலுத்தியும், அந்த இடம் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என கூறி பணம் செலுத்தப்பட்ட மனைகளை தரவில்லை. அதற்கு மாறாக, அதே கார்டனில் 12, 21, 30 ஆகிய மனைகளை வாங்கிக் கொள்ளுமாறும், அதற்காக ரூ.1 லட்சத்து 85ஆயிரத்து 550 தொகை செலுத்துமாறும் விஜயகுமாரிடம் எதிர்தரப்பினர் கூறியுள்ளார்.

அந்த தொகையை செலுத்தியும் மேற்கண்ட மனைகளை எதிர்தரப்பினர் கிரையம் செய்து தராமல், மொத்தம் ரூ.3லட்சத்து 98ஆயிரத்து 600 தொகையை வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதேபோல் மேற்கண்ட மூன்று பேரும் பலரை ஏமாற்றியதாக தெரிகிறது.

மாவட்ட ஆட்சிய்ருடன் இருக்கும் செந்தில்குமார்

இதுதொடர்பாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செந்தில்குமார், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.300 கோடி தருவதாகக் கூறி விவசாயிகளிடம் ஒரு கோடி மோசடி - கும்பல் கைது

Intro:கோவையில் நிலம் வாங்கியவருக்கு, தவணைத் தொகை செலுத்தியும் கிரையம் செய்து தராமல் மோசடி செய்ததாக, போலீஸ் நண்பர்கள் குழுவின் (பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்) ஒருங்கிணைப்பாளர் உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Body: கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.

பீளமேடு பாலன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவருக்கும் காந்திபுரத்தில் தேஜஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரும், போலீஸ் நண்பர்கள் குழுவின் (பிரென்ட்ஸ் ஆப் போலீஸ்) ஒருங்கிணைப்பாளருமான செந்தில்குமார் என்பவருக்கும் முன்னரே அறிமுகம் உள்ளது. அதன் பேரில், செந்தில்குமாருக்கு சொந்தமான அன்னூர் கணுவக்கரை கிராமத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட வீட்டுமனைகள் லேஅவுட் பிரிவில் இருந்து, 2 மனைகளை விஜயகுமார் வாங்கியுள்ளார்.

இதற்காக விஜயகுமார் முன்பணத் தொகையாக ரூ.20 ஆயிரம் செலுத்தியுள்ளார். இதை தன் கூட்டாளி ஈஸ்வரன் பெயரில் வாங்கி செந்தில்குமார் வரவு வைத்துள்ளார். பின்னர்,செந்தில்குமார் தனக்கு சொந்தமான ஐஸ்வர்யம் கார்டன் என்ற மனையிடத்தில் 78, 79 ஆகிய மனைகளை ஒதுக்கி, இரண்டுக்கும் சேர்த்து மாதம் ரூ.7,550 வீதம் 36 மாதங்களில் ரூ.2,91,800 தொகை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு விஜயகுமாருக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார்.

அதன்படி, ஈஸ்வரனுக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாதந்தோறும் தொகையை வசூலித்து ரசீது வழங்கியுள்ளார். விஜயகுமார் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முழுத் தொகையை செலுத்தியும் அப்ரூவல் ஆகவில்லை, என அந்த மனைகளை தரவில்லை. அதற்கு மாறாக, அதே கார்டனில் 12, 21, 30 ஆகிய மனைகளை வாங்கிக் கொள்ளுமாறு, அதற்காக ரூ.1,85,550 தொகை செலுத்துமாறு விஜயகுமாரிடம் எதிர்தரப்பினர் கூறியுள்ளார். அந்த தொகையை செலுத்தியும் மேற்கண்ட மனைகளை எதிர்தரப்பினர் கிரையம் செய்து தராமல், மொத்தம் ரூ.3,98,600 தொகையை வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதேபோல் மேற்கண்ட மூன்று பேரும் பலரை ஏமாற்றியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செந்தில்குமார், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.