கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், அதன் தலைவர்கள், அக்கட்சி அலுவலகம் தொடர்பாக அவதூறு பரப்பும் நோக்கில் போலி முகநூல் பக்கத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில அலுவலகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என்றும் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் நல்லகண்ணை தரக்குறைவாகவும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
இது "மார்க்சியம் வென்றே தீரும்" என்ற முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பதிவை வெளியிடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.