கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்சா, நசீர் ஆகியோர். இவர்கள் இருவரும் நேற்று கேரளாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாலக்காடு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த கார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், இளைஞர் பாட்சா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நசீரை அங்கிருந்தவர்கள் கோவையைச் சேர்ந்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு 1 மணி நேரத்தில் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நசீர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.