ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே பேருந்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி - பேருந்தில் அடிபட்டு மாணவர் பலி

பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அருகே பேருந்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

author img

By

Published : Feb 7, 2023, 12:39 PM IST

கோவை: கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (22) பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடுமலையில் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி கல்லூரி சென்று வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வெளியே வந்த மதன்லால் கோவையிலிருந்து பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி முன்பிருந்த நிறுத்தத்தில் ஏறி உள்ளார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏறிய மதன்லால் பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் மதன்லால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார் மதன் லாலின் உடலை மீட்டு பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பேருந்தை பறிமுதல் செய்த கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழித்த என்ஐஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.