கடந்த நவம்பர் 26ஆம் தேதி இரவு பள்ளி மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை தனது காதலனுடன் கொண்டாடுவதற்காக கோவை சீரநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் மாணவியின் காதலனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நான்குபேரை காவலர்கள் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில் முக்கிய குற்றவாளி மணிகண்டன், பப்ஸ் கார்த்திக்கை காவலர்கள் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தச் சூழ்நிலையில், மணிகண்டன் இன்று தாமாக முன்வந்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர், அவரை வருகின்ற 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும் இந்திய தண்டனைச்சட்டம் 354 மானபங்கப்படுத்துதல், 506(2)கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பூங்காவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது பாய்ந்தது போக்சோ!