நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவ 30) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார், அதனை ஒட்டி கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும், நாளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்ற நற்செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் கட்சியை துவங்கினால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை செய்ய ரசிகர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.