கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரண சம்பவத்தைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் சில கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் பெற்றோர்களிடம் “indemnity” என்னும் ‘பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல’ என்ற படிவத்தை வழங்கி, அதில் கையெழுத்திட கட்டாயபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு இதில் கையெழுத்திடவில்லை என்றால், மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை பெற்று செல்லுமாறும் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் பலர் இந்த படிவத்தில் கையெழுத்திட்டுச் செல்கின்றனர். ஆனால், இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் பள்ளியில் indemnity படிவம் வாங்குவது உண்மைதான் என்றாலும் பெற்றொரை கட்டாயப்படுத்துவதில்லை என தெரிவித்தனர்.
இதேபோல் தனியார் பள்ளிகளில் பெற்றோரிடம் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையாளர்களை நெருங்கும் போலீசார் - விசாரணை தீவிரம்!