கோவை ஒண்டிபுதூரில் வேதவள்ளி என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் சகோதரர் மாதவனுடன் வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர், அமெரிக்காவில் பணியாற்றிய போது உயிரிழந்தார். இந்நிலையில், வேதவள்ளியின் ஐந்து வயது மகள் கார்குழலிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி நேற்று இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேதவள்ளியின் பெற்றோரும், சகோதரும் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது, வேதவள்ளி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர், சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில், கணவரை இழந்த சோகத்தில் இருந்த வேதவள்ளி, குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்றனர்.
இதையடுத்து, தந்தை ராமகிருஷ்ணன், சகோதரர் மாதவன் ஆகியோருடன் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் சலூன் கடை உரிமையாளர் தற்கொலை!