வஉசி மைதானத்தில் மறைந்த பிரபல திரையுலகப் பின்னணி பாடகரான எஸ்பிபி இசை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் எஸ்பிபி பாடிய 300க்கும் மேற்பட்ட பாடல்களை இசைக்குழுவினர் பாடினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமருமாறு நாற்காலிகள் போடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க நீண்ட நேரமானதால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே பங்கேற்றனர். ஊரடங்குத் தளர்வுக்குப் பின் வஉசி மைதானத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாகும்.
இதையும் படிங்க...அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை - ஸ்டாலின்