கோயம்புத்தூர் மாநகர திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி திமுகவினர் சரவணம்பட்டி பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பையா (எ) கிருஷ்ணன் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் நிர்வாகிகளுக்கு எவ்வித பதவிகளையும் வழங்காமலும் கட்சி பணிகளை செய்யவிடாமல் தடுத்து புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
![DMK](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-dmk-protest-against-dmk-party-visu-tn10027_13022021134731_1302f_1613204251_1006.jpg)
அதிமுகவினரிடம் பணம் பெற்றுக்கொண்டு நாங்கள் செயல்படுவதாக அவர் தெரிவிக்கிறார். அவர் இந்த போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் தலைமையிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்’: துரைமுருகன்