கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில்பாலியல் துன்புறுத்தலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களைசந்தித்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி.பாண்டியராஜன்புகார் அளித்த பெண் குறித்த தகவல்களை வெளியிட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குறித்து விவரங்களை வெளியிட்ட மாவட்ட கண்காணிப்பாளரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட்ட கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து இவ்வழக்கினை முறையாக விசாரணைமேற்கொள்ளாத காரணத்தினால் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயராமன்மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் ஆகிய மூவரையும் தமிழக அரசு பணியிடைமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.