ETV Bharat / state

சொத்து வரி சீக்கிரம் செலுத்தினா போனசா..! கோவை மாநகராட்சி ஆணையர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! - property tax

Coimbatore Collector on Property Tax : கோவை மாநகராட்சியில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தும் பயனர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்

அக்டோபர் 31-குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை..
கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 9:13 AM IST

Updated : Sep 22, 2023, 9:44 AM IST

கோயம்புத்தூர்: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ஆம் அரை ஆண்டிற்கான சொத்து வரியினை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, சொத்துவரி தொகையில் இருந்து ஐந்து சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இதையும் படிங்க: சதுப்பு நிலத்தில் நீர்வழித் தடம்.. பருவமழையை எதிர்கொள்ளத் தயாராகிறதா தென்சென்னை?

சொத்துவரி தொகையினை ரொக்கம், கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும், மேலும் tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதளத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், மேற்காணும் வசதியினை முழுமையாக பயன்படுத்தி 2023-24ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் வரை ஊக்கத் தொகையினை பெற்று பயனடையுமாறு" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது’ - கர்நாடகாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Last Updated : Sep 22, 2023, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.