ETV Bharat / state

கோவை போலீசாருக்கு இனி சுழற்சி முறையில் வார விடுமுறை! - weekly leave

கோவை மாநகரக் காவல்துறையில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க, மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க உத்தரவு

author img

By

Published : Jul 2, 2021, 10:33 AM IST

கோயம்புத்தூர்: மாநகரக் காவல் துறையில் உயர் அலுவலர்கள், காவலர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணிகளுக்காக, காவல் துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

எனினும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும், பொது இடங்களிலும் அவ்வப்போது காவலர்கள் கடுமையாக நடந்து கொள்வது குறித்த செய்திகள் மறுபுறம் வந்த வண்ணம் உள்ளன.

பணிச்சுமை, மன அழுத்தம்

இந்நிலையில், ஓய்வின்றி பணியாற்றுவதால் காவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, மன உளைச்சல் ஆகியவை குறித்து ஆணையரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதையடுத்து மாநகரக் காவல் ஆணையர் தீபக்.என்.தாமோர், காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சுழற்சி முறையில் வார விடுமுறை

இதன்படி உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்துக் கொள்ளவும், மற்ற காவலர்களுக்கு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் வார விடுமுறையை ஒதுக்கி வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே.. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.