கோயம்புத்தூர்: செல்வபுரம் பகுதியை சேர்ந்த பைசல் பசீனா தம்பதியினரின் மகன்கள் முகமது மிப்ஜல்(14) மற்றும் முகமது பாசில்(12). கரோனா ஊரடங்கில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கொண்டு பேருந்து, பைக் போன்ற மினியேச்சர் வாகனங்களை செய்ய கற்றுள்ளனர். இவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக பெற்றோர் மினியேச்சர் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கின்றனர்.
ஊரடங்கு காலத்தில் பொழுது போக்கிற்காக செய்ய ஆரம்பித்த இவர்கள், தற்போது 20க்கும் மேற்பட்ட மினியேச்சர் வாகனங்களை தத்ரூபமாக செய்து அதில் மினி எல்.இ.டி விளக்குகளை பொருத்தி மேலும் அழகாக மாற்றினர். இவர்களின் திறமை அனைவரும் அறியும் வண்ணம், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அப்லோட் செய்து வருகின்றனர்.
இது குறித்து சிறுவன் முகமது பாசில் கூறும் போது, "தாத்தா தான் இவற்றை கற்று கொடுத்தார். ஊரடங்கில் இதனை செய்ய ஆரம்பித்தோம். இப்போது பள்ளிகள் தொடங்கினாலும் நேரம் கிடைக்கும் போது செய்து வருகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - முதலமைச்சர்