கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில், வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு தொழில்நுட்ப பிரிவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுகவில் இளைஞர்கள், இளம்பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தடுக்கும் விதமாக தொழில்நுட்ப பிரிவுவில் உள்ளவர்கள் செயல்படுகிறீர்கள். வரும் 2021ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் தொழில்நுட்ப பிரிவினர் முக்கிய பங்கு வகிப்பார்கள். எதிர்காலத்தில், நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய தகுதி பெறுவீர்கள்” எனப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிருஷ்ணகுமார், முன்னாள் அமைச்சர் தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஜெயக்குமார்