ETV Bharat / state

பெண் துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய  சுகாதார ஆய்வாளர்! - வடக்கு மண்டல உதவி ஆணையர் தென்றல்

கோவை : சுகாதாரப் பணியாளரைத் தகாத வார்த்தைகளால் பேசிய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, வடக்கு மண்டல உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தனர்.

cleaning_people_petition
author img

By

Published : Nov 5, 2019, 6:35 PM IST

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 40ஆவது வார்டில் , டெங்கு பிரிவில் சுகாதார பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் அமுதா , காளியம்மாள் , ரத்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆவராம்பாளையம் இளங்கோ நகரில் இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது , மாநகராட்சியின் சுகாதார அதிகாரி, சுகாதார ஆய்வாளர் இருவரும் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து, மேற்பார்வையிட வந்துள்ளதாகத் தெரிகிறது. அப்போது மூவரும் கோட் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, சுகாதார அதிகாரி கட்டாயம் கோட் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து அமுதா தனக்கு கோட் சிறியதாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனவும், காளியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கோட் அணியாமல் இருப்பதாகவும், ரத்னாவிற்கு இன்னும் கோட் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்த சுகாதார ஆய்வாளர் திருமால், மூவரையும் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு அவர்கள் வைத்திருந்த மருந்து உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்புரவுப் பணியாளர்கள் வடக்கு மண்டல உதவி ஆணையரிடம் புகாரளித்தனர்

மேலும் ’உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்' என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு மண்டல உதவி ஆணையர் தென்றல் ரத்தினம் அவர்களிடம் சுகாதார ஆய்வாளர் திருமால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர்.

இதையும் படிங்க:

காற்றாலை மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை! - ஒரு மணி நேரத்தில் பிணை பெற்ற சரிதா நாயர்

Intro:கோவை மாநகராட்சி 40வது வார்டில் டெங்கு பணி மேற்கொண்ட தினக்கூலி பெண் துப்புரவு பணியார்களை சுகாதார ஆய்வாளர் திருமால் தகாத வார்த்தைகளில் திட்டியதாக வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் மனு.Body:சுகாதார பணியாளரை தகாத வார்த்தைகளால் பேசிய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வடக்கு மண்டல உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 40 வார்டில் , டெங்கு பிரிவில் சுகாதார பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் அமுதா , காளியம்மாள் , ரத்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை ஆவராம்பாளையம் இளங்கோ நகரில் இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது , மாநகராட்சியின் சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார ஆய்வாளர் இருவரும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது மூவரும் கோட் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்து சுகாதார அதிகாரி கட்டாயம் கோட் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் எனகூறியுள்ளார். இதையடுத்து அமுதா தனக்கு கோட் சிறியதாக் இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனவும், காளியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கோட் அணியாமல் இருப்பதாகவும், ரத்னாவிற்கு இன்னும் கோட் வழங்கப்படவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த சுகாதார ஆய்வாளர் திருமால், நீங்கள் மூவரும் தலைவர்களின் மனைவிகளா எனவும் , தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு அவர்கள் வைத்திருந்த மருந்து உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு மண்டல உதவி ஆணையர் தென்றல் ரத்தினம் அவர்களிடம் சுகாதார ஆய்வாளர் திருமால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர்.

பேட்டி ; அமுதாConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.