ETV Bharat / state

21 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் - Foreign cigarettes seized in covai

கோவை: சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கவரித் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்
author img

By

Published : Jan 3, 2020, 1:56 PM IST

கோவை விமான நிலையத்தில், சுங்கவரித் துறை அலுவலர்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கார்ட் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானப் பயணிகளை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில், சந்தேகத்துக்கிடமாக இருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அபீஸ் என்ற இளைஞரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் உரிய ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

கோவை விமான நிலையம்

அதேபோல், மற்றொரு பயணியான பிரீதின் ஏண்டோ என்ற இளைஞரிடம் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளையும் சுங்கவரித் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரிடமும் சுங்கவரித் துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கார்ப்பரேட் வரி குறைப்பால் பலனடைந்த பிரபல சிகரெட் நிறுவனம்!

Intro:கோவை விமான நிலையத்தில் சிங்கபூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரளாவை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரணை.Body:கோவை விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஸ்கார்ட் ஏர் லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கேரளா திருசூரை சேர்ந்த அபீஸ் என்ற வாலிபரை பிடித்து சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட ரூ10.65 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.  இதே போல் மற்றொரு பயணியான கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரீதின் ஏண்டோ என்ற வாலிபரிடம் சோதனையிட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.10.80 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்தும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.