கோவையில் தினசரி கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில். மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கின் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன். 5) நடைபெற்றது.
இதில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், சிறப்பு அலுவலர்கள் ஜெகநாதன், சுகாதாரத்துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: களைகட்டும் கட்டிங் முதல் யூடியூப் கள்ளச்சாராய விற்பனை!