ETV Bharat / state

சென்னை மருத்துவமனையின் தலைவர் உமாசங்கர் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை!

author img

By

Published : Jan 23, 2021, 9:06 PM IST

கோவை: மருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கிய சென்னை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் உமாசங்கர் கார் மோதி விபத்தில் உயிழந்தாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மருத்துவர் உமாசங்கர் உயிரிழப்பு  சென்னை மருத்துவமனை சேர்மன் உமாசங்கர் உயிரிழப்பு  சென்னை மருத்துவமனை சேர்மன் உமாசங்கர் உயிரிழப்பு காவல் துறை விசாரணை  Doctor Umashankar dead  Chennai Hospital Chairman Umasankar dead  Chennai Hospital Chairman Umasankar's death is being investigated by the police
Chennai Hospital Chairman Umasankar dead

கோவை காந்திபுரத்தில் இயங்கிவந்த எல்லன் என்ற பிரபல மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் ராமச்சந்திரன் (72). இவரை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (54) என்ற மருத்துவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடர்புகொண்டு, 'சென்னை மருத்துவமனை' என்ற பெயரில், தான் ஒரு மருத்துமனையை நடத்திவருவதாகவும், அதன் கிளையை கோவையிலும் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையை நிர்வகிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமச்சந்திரன், எல்லன் மருத்துவமனை கட்டடத்தை வாடகைக்கு விட ஒப்புக் கொண்டுள்ளார். மாத வாடகை 15 லட்சம் ரூபாயும், 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரியும் செலுத்த வேண்டும், ஆண்டுதோறும் 10 விழுக்காடு வாடகை உயர்த்தப்படும் என்றும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இதை உமாசங்கர் ஏற்றுக்கொண்டதையடுத்து, இருவரும் 2017ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்த நிலையில், ஒரு கோடி ரூபாயை முன்பணமாக உமாசங்கர் கொடுத்துள்ளார். ராமச்சந்திரன் அப்பகுதியில் பிரபல மருத்துவர் என்பதால், பழக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அந்த மருத்துவமனையிலேயே தனியாக ஒரு அறையை ஒதுக்கி தரவும் வாடகைதாரரான உமாசங்கர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, எல்லன் மருத்துவமனையின் பெயரை, 'சென்னை மருத்துவமனை' என மாற்றி நடத்தி வந்த உமாசங்கர், பேசியபடி வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 3 ஆண்டுகளாக மருத்துவர் உமாசங்கர் முறையாக வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 18 விழுக்காடு ஜி.எஸ்.டி.வரியை ராமச்சந்திரனே கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் படி, உமாசங்கரிடம் ராமசந்திரன் கேட்டுள்ளார். ஆனால், அதை காதில் போட்டுக் கொள்ளாத உமாசங்கர், வேறு ஒருவருக்கு மருத்துவமனையை வாடகைக்கு விடவும் முயற்சித்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் அது குறித்து கேட்டபோது, உமாசங்கரும், அவரது மருத்துவமனை மேலாளர் மருதவாணன் என்பவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் ராமச்சந்திரன் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், "தனது வயோதிகத்தைப் பயன்படுத்தி, ஏமாற்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவமனையை அபகரிக்க முயற்சித்து, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். தனக்கு வரவேண்டிய 4.95 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து கொடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, மருத்துவர் உமாசங்கர், மருதவானன் மீது கொலை மிரட்டல், மோசடி உள்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர், இருவரையும் கைது செய்து கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைத்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த உமாசங்கர் தினமும் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், இன்று கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலே உமாசங்கர் உயிரிழந்தார். ஏற்கெனவே பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த மருத்துவர் உமாசங்கர் விபத்தில் கார் மோதி உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்டு யாரேனும் அவரை கொலை செய்தார்களா என்பது குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் படுகொலை - போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.