ETV Bharat / state

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிப் பொருள்கள் வழங்கும் விழா!

author img

By

Published : Mar 1, 2020, 12:11 PM IST

கோவை: இந்தியன் எண்ணெய் நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் இணைந்து ஒரு கோடி மதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிப் பொருள்களை வழங்கியது.

Ceremony of providing assistance materials for differently abled persons - Minister participates!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவி, மாற்றுத்திறனாளிகளுக்கான மோட்டார் வாகனம், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு உதவிப் பொருள்களை அமைச்சர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிப் பொருள்கள் வழங்கும் விழா

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவரும் நிலையில், தற்போது இந்தியன் எண்ணெய் நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் இணைந்து அவர்களுக்கு உதவுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தற்பொழுது ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகத் (மினரல் வாட்டர்) தட்டுப்பாட்டிற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜப்பான் கப்பலிலிருந்து திரும்பிய 161 பேருக்கு கொரோனா இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.