கோவை: குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்று கோவை சுற்று வட்டாரப்பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த கோவை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதித்து வருகிறது.
இந்நிலையில், கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் பணி நடைபெற்று வந்தபோது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டன. இதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டதால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் ஜவுளி தொழில் நலிவடைந்துவிட்டது - கே.எஸ்.அழகிரி