கோவை மதுக்கரை பகுதியில் பிரபல தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு பயிலும் மாணவர்களை, பள்ளிக்கு அழைத்துவரும் பணிக்கு, தனியார் வாகன உரிமையாளர்களிடம் இருந்து, ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கோவை விஜயயலட்சுமி மில்ஸ், நரசிம்மபுரம் பகுதியில் மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த தனியார் வாகனம் ஒன்று நிலை தடுமாறி வீட்டின்முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ஏறியது.
இதுகுறித்து ஓட்டுநரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிள்ளனர். அப்போது அவர் மதுபோதையில் பள்ளி வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குணியமுத்தூர் போலீசார் ஓட்டுநரை விசாரித்ததில் அவர் பெயர் முருகேசன் என்பதும், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிவாகன ஓட்டுநர் மது போதையில் வாகனம் இயக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: அரசின் அறிவிப்பை மீறி கொரட்டூரில் களைகட்டிய மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல் துறை!