ETV Bharat / state

நீர்நிலைகளை அரசு நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் - pond

கோவையில் செங்குளத்தின் நடுவே விதிமுறைகளை மீறி குடிசை மாற்று வாரியம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்
author img

By

Published : May 8, 2019, 7:41 PM IST

கோவை குனியமுத்தூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் கைகொடுக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த செங்குளம், அண்மையில் தன்னார்வலர்களின் முயற்சியினால் தூர்வாரப்பட்டது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறும் வகையில் குளத்தை இரண்டாக பிரித்து குளத்தின் நடுவே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைத்துள்ளது அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்திற்கு நடுவே மண் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலையை தார்சாலையாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் செந்தில்குமார் கூறுகையில், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் அரசு நிறுவனங்கள் செயல்படுகிறது. குளத்தின் நடுவே சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல எனக் கூறினார்.

இது குறித்து பொதுப்பணித்துறை சிறப்பு திட்ட இயக்குநர் ஜெயபிரகாஷிடம் கேட்டபோது,

குளத்தில் நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் எதும் நடைபெறவில்லை குடிசை மாற்று வாரிய பணிகள் விரைந்து நடப்பதற்காக தற்காலிக மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.         கோவை

கோவை செங்குளத்தின் நடுவே விதிமுறைகளை மீறி குடிசை மாற்று வாரியம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைத்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனமே, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

கோவை குனியமுத்தூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு நீர் வரத்து நொய்யல் நதியில் இருந்து வாய்க்கால் மூலமாக வந்து சேரும். இந்த குளம் நிரம்பிய பின்னர் உபரிநீர், குறிச்சி குளத்திற்கு சென்றடையும். இந்த குளத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் கைகொடுக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் மற்றும் குப்பைகள் பிடியில் சிக்கி கேட்பாரற்று கிடந்த செங்குளம், அண்மையில் தன்னார்வலர்களின் முயற்சியினால் தூர்வாரப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இந்நிலையில் குளத்தில் ஒரு புதிய ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. அதுவும் அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினால்…
செங்குளத்தின் பின்பக்க பகுதியில் குளத்திற்கு அருகாமையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. குனியமுத்தூர் பகுதியில் இருந்து கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கு செல்ல குளத்திற்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் மண் கொட்டி மேடாக்கப்பட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி குளத்தை இரண்டாக பிரிக்கும் வகையில் குளத்தின் நடுவே சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறது. மேலும் குளத்தின் இருபக்கமும் தண்ணீர் செல்லும் வகையில் குழாய்களும் வைக்கப்பட்டுள்ளது. 
எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்திற்கு நடுவே மண் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலையை தார்சாலையாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. குளம் உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அரசே, குளத்தினை ஆக்கிரமித்து சாலை அமைத்திருப்பது மோசமான செயல்பாடு என வழக்கறிஞர் கரீம் குற்றம்சாட்டியுள்ளார்.
பேட்டி : கரீம் - வழக்கறிஞர்
இந்த செயல்பாடு எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், தரை மட்டத்தில் போடப்பட்டுள்ள சாலையில் மழைகாலத்தில் விபத்துக்கள் ஏற்பட நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். குளத்தின் நடுவே சாலை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டுமெனவும், நீர் தேக்க பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசும், அரசு அதிகாரிளும் சட்டத்தை மதிப்பதில்லை என்பதற்கு இந்த செயல்பாடே உதாரணம் எனவும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் அரசு நிறுவனங்கள் செயல்படுவதாக சமூக செயற்பட்டாளர் செந்தில்குமார் தெரிவித்தார். மேலும் மழை பெய்ய வேண்டுமென யாகம் நடத்தும் அரசு, மறுபுறம் குளத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி : செந்தில்குமார் - சமூக செயற்பாட்டாளர்
செங்குளத்தின் நடுவே சாலை அமைக்கப்படுவது குறித்து பொதுப்பணி துறை சிறப்பு திட்ட இயக்குநர் ஜெயபிரகாஷிடம் கேட்ட போது, குளத்தில் நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறவில்லை எனவும், குடிசை மாற்று வாரிய பணிகள் விரைந்து நடப்பதற்காக தற்காலிக மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். மழைக்காலத்தில் குளம் நிரப்பும் வகையில் சாலையினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் குளத்தின் நடுவே சாலை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி : ஜெயபிரகாஷ் - சிறப்பு திட்ட இயக்குநர், பொதுப்பணித்துறை (தொலைப்பேசி பேச்சு)
குளத்தின் நடுவே அரசே ஆக்கிரமித்து சாலை அமைப்பது ஏற்புடையது அல்ல என்பதும், இந்த சாலையினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Video in ftp

TN_CBE_1_8_POUND ISSUE_9020856
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.