கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் Twin throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் தனது பைக் சாகசங்களை வீடியோவாக எடுத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் வாசன் அதிவேகத்தில் பைக்கில் பறப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன், யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை - பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் இயக்கிய வீடியோ வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை இயக்கி, அதை வீடியோவாக யூடியூப் சேனலில் வெளியிட்டதாக டிடிஎஃப் வாசன் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CCTV: 'எவ்வளோ நேரம் தான் நானும் ட்ரை பண்றது' - புல்லட் பைக்கை திருடமுயற்சி