ETV Bharat / state

தொடரும் செங்கல் சூளை ஆதரவாளர்களின் தாக்குதல்... - விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூக ஆர்வலர்கள்

கோவை: தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யத்தினரை கிராம சபைக்கூட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர்.

Brick owners attacked social activists who are protesting against taking sands
author img

By

Published : Oct 2, 2019, 10:34 PM IST

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி 100 அடி வரை இயந்திரங்கள் மூலம் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு அளவுக்கதிகமாக எடுக்கப்படும் செம்மண்ணால், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள் ஒரு பள்ளத்தாக்கைக் போல காட்சி அளித்து வருவதோடு, மனித - யானை மோதல்களுக்கு காரணமாகவும் உள்ளது.

தொடரும் செங்கல் சூளை ஆதரவாளர்களின் தாக்குதல்

இந்நிலையில் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மண் எடுப்பது தொடர்பாக ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதேபோல, மருத்துவரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான ரமேஷ், கணேஷ் ஆகியோர் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இவர்களுக்கு செங்கல் சூளை ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடரும் செங்கல் சூளை ஆதரவாளர்களின் தாக்குதல்

அதுமட்டுமின்றி, வீரபாண்டி பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு எதிராக மனு அளிக்க சென்ற சமூக செயற்பட்டாளர் ஜோஸ்வாவை முப்பதிற்கும் மேற்பட்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள் அடித்து இழுத்து சென்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதி அதிமுக செயலாளர் ஜெயபால் தூண்டுதலால் நடந்ததாகவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தடாகம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இதேபோல, சின்னத்தடாகம் பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பாபு, பிரபு, சுரேஷ் ஆகிய மூன்று பேர் மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:'சட்டவிரோதமாக மணல் அள்ளும் தனியார் நிறுவனம்' - 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை!

Intro:"சுற்றுச் சூழலை பாதுகாக்கவா போராடுறீங்க"

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூக ஆர்வலர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தினர் மீது கிராம சபைக்கூட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்குதல் ..Body:கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி 100 அடி வரை செம்மண் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அளவுக்கதிகமாக எடுக்கப்படும் செம்மண்ணால், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஒரு பள்ளத்தாக்கைக் போல காட்சி அளித்து வருவதோடு, மனித - யானை மோதல்களுக்கு காரணமாகவும் உள்ளது. இந்நிலையில் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதேபோல தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல தகவல்களை வெளிக்கொண்டு வந்த கணேஷ், மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரமேஷ் ஆகியோரை செங்கல் சூளை ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தனர்
இந்நிலையில் 24 வீரபாண்டி பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் சமூக செயற்பட்டாளர் ஜோஸ்வா செங்கல் சூளைகளுக்கு எதிராக மனு அளிக்க சென்றார். அப்போது 30 க்கும் மேற்பட்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள் ஜோஸ்வாவை அடித்து இழுத்து சென்று தாக்குதல் நடத்தினர். அதிமுக பகுதி செயலாளர் ஜெயபால் தூண்டுதலால் தாக்குதல் நடந்ததாகவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல சின்னத்தடாகம் பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பாபு, பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேர் மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.