ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை! - காவல்துறை விசாரணை

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை, 7000 ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Breaking the lock of the house jewelry, money robbery-police investigation!

author img

By

Published : Aug 25, 2020, 12:22 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை செந்தில்நாதன் அவரது மனைவி கலாவதி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று, பின்னர் நேற்று (ஆகஸ்ட் 24) காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் உள்ளே சென்று பார்க்கையில், படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் தங்க நகை, 7,000 ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்தது. பின்னார் இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டின் பின்பக்கம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே சென்று பீரோவிலிருந்த நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்கு பதிவான கைரேகைகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவில் ரூ.86.69 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.