ETV Bharat / state

சிறுமியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவன் போக்சோவில் கைது! - போக்சோ

கோவையில் 16 வயது பள்ளி மாணவியின் நிர்வாணமான வீடியோ பதிவைக் காட்டி மிரட்டிய சிறுவனை போக்ஸோவில் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியின் வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவன் கைது

author img

By

Published : Jul 27, 2022, 10:16 PM IST

கோவை: அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பில் உடன் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்குப் பழக்கம் இருந்தது. அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார். அதன்பிறகும் மாணவியிடம் செல்போனில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார்.

போனில் பேசி வந்த அவர்கள் நாளடைவில் வாட்ஸ் வீடியோ கால் மூலமும் பேசி பழகி வந்ததாகத் தெரிகிறது. வீடியோ காலில் பேசும்போது மாணவி நிர்வாணமாக இருக்கையில் பேசிய காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து கொண்டான். மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், ’நீ ஏற்கெனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாகப் பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் இந்தக் காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன்’ என்று மிரட்டினார். மேலும் அடுத்த நிமிடமே மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்தான். அதனைக்கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். நிலைமை விபரீதமானதை உணர்ந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்னையைக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தனர். ஆய்வாளர் ஜெயாதேவி சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த சிறுவன் சின்னியம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் என கண்டறியப்பட்டதை அடுத்து சிறுவனை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'காலை உணவு வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டபின் கிடைத்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை' - முதலமைச்சர் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.