சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் தென்னம்பாளையம் உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் இன்று (டிச.30) கேட்பாரற்று ஒரு கைப்பை கிடந்துள்ளது. இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் அந்த கைப்பையில் என்ன உள்ளது எனத் திறந்து பார்த்தபோது, அதில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையின் உடலைமீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையில் சடலத்தை வீசிச்சென்றது யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி தம்பதியருக்கு அரிவாள் வெட்டு: பெண் உயிரிழப்பு!