ETV Bharat / state

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆபாச பேச்சுக்கு எதிராக வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்! - சட்டப்பேரவையில் முகம் சுளிக்க வைக்கும்

Nitishkumar Controversy Speech: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை கண்டித்து கோவையில் பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த போவதாகவும், இந்தியா கூட்டணி என்பது பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரான கூட்டணி என பிரச்சாரம் செய்வோம் எனக் கூறிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுகவினர் என யாரும் நிதிஷ் குமார் பேச்சு குறித்து பேசாமல் மௌனமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 9:55 PM IST

Updated : Nov 8, 2023, 10:17 PM IST

நிதிஷ்குமாரின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு பாஜக மகளிரணி கண்டனம் - வானதி சீனிவாசன்

கோவை: மக்கள் தொகை குறித்து பீகார் சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அருவருக்கதக்க வகையில், ஆபாசமாக பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் பேசிய இப்பேச்சு, தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்களை கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில், கோவை பாஜக மகளிர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சர்ச்சையான பேச்சை கண்டித்து இன்று (நவ.8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதிஷ் குமாருக்கும், அவரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பெண்கள் குறித்தும், மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சைக் கண்டித்து பாஜகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் பாஜக மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

ஒருபுறம் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி, உடல் நிலை, பாதுகாப்பு, பெருமை மற்றும் கண்ணியத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையிலும் பெண்களை உயர்வுபடுத்தும் வேலையை செய்துவருகிறார். ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவினர் என யாரும் நிதிஷ் குமார் பேச்சுக்கு கருத்து தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களுடைய பெண்கள் குறித்த பார்வையை இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. இவர்களால் இந்நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய முடியும்? என்பதை இவர்களது பேச்சு காட்டுகிறது. இதை மகளிர் மத்தியில் பாஜக மகளிர் அணியினர் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும்' என பேசினார்.

மேலும் பேசிய அவர், 'உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என கூறியுள்ளது. ஆனால், நாட்டின் மூத்த அரசியல்வாதி எனப் பார்க்கக்கூடிய, ஒரு மாநில முதலமைச்சராக இருந்தவர், பலமுறை முதலமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற ஒருவர் இதுபோன்ற கேவலமான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஆணாதிக்க மனநிலையை இந்தப் பேச்சுகள் காட்டுகின்றன. இந்தியா கூட்டணி என்பது பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரான கூட்டணி என்பதை, பாஜக மகளிர் அணி பிரச்சாரத்தில் முன்னிறுத்தும்' என்றார்.

இதனிடையே, 'ராகிங்' குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒரு சில கல்லூரியில் ராகிங் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவையில் இச்சம்பவத்தை பொறுத்தவரை, அவர்கள் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதைத் தாண்டி, தவறுகள் நடப்பதற்கு முன்பு கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விதத்திலும் புதிதாக வரும் கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ராகிங் போன்ற செயல்களை பாஜக ஆதரிக்காது' எனப் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் முகம் சுளிக்க வைக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பேச்சு: சட்டப்பேரவையில் பேசிய அவர், மக்கள் தொகை குறித்து பேசுகையில், "கல்வியறிவு மூலம் பெண்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். பீகாரில் பெண் கல்வி அதிகரித்து வரும் நிலையில், குளிர்காலத்தில் திருமணமான பெண்களுக்கு அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருக்கும் நிலைமை ஏற்படும்.

இதனால், குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. ஆனால், பெண்கள் கல்வியறிவு பெற்றிருப்பின் அவர்களுக்கு கணவருடன் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவார்கள். இதற்கு முன்பு, 4.3% ஆக இருந்த பிறப்பு விகிதம் இப்போது, 2.9% ஆக குறைந்துள்ளதற்கு காரணம் பெண்கள் கல்வியறிவு பெற்றது தான் காரணம்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு அவையில் இருந்த பலரும் சிரித்தனர். இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படியெல்லாம் பேசுவாரா? என இவரின் இப்பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டசபையில் பெண்கள் குறித்த பேச்சு..! பகிரங்க மன்னிப்பு கோரிய பீகார் முதலமைச்சர்!

Last Updated : Nov 8, 2023, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.