கோவை சுங்கம் பகுதியில் அதிமுக கூட்டணி ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், "எளிமையான தலைவனால்தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச்சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் . அதனால்தான் தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார் என்றார்.
மேலும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்படுமேயானால் தமிழக வளர்ச்சி இரண்டு மடங்காக உயரும் "என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவில் ஏழைகள் உருவாக காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான் எனவும், ராகுல் காந்தி ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்திருப்பது மக்களை முட்டாளுக்கும் முயற்சி" என்றும் விமர்சித்தார்.