தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கோவை வீரகேரளம் பகுதியில் ஈஷா மயானம் அருகேயுள்ள குடியிருப்பு போல காட்சியளிக்கும் இடத்தில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை இருந்து வரும் நிலையில் கேரள லாட்டரியில் நாள்தோறும் வெளியிடப்படும் லாட்டரி முடிவுகளைக்கொண்டு நடைபெறும் இந்த மூன்று நம்பர் லாட்டரி காவல்துறையினரின் காண்காணிப்பு இல்லாத காரணத்தால் எவ்வித தடையும் இன்றி சர்வசாதரணமாக நடைபெற்று வருகிறது.
இதில் லாட்டரி கும்பல், லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டி வருகிறது. கூலித்தொழிலாளர்களும் அப்பாவி பொதுமக்களும் இந்த லாட்டரியில் பணத்தை இழந்து வருகின்றனர்.
உடனடியாக காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தி லாட்டரி நடத்துபவர்களை கைது செய்து ஏழைத்தொழிலாளர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ’மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச வாரம் ஒருநாள் சிறப்பு பயிற்சி’ - செங்கோட்டையன்