கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் மேட்டுப்பாளையம் சாலையில் சிட்டி யூனியன் வங்கியின் கிளையும், அதன் அருகே ஏடிஎம் மையமும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இரும்புக் கம்பியை வைத்து இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை துணியால் மூடி, பின் அதைத் திருப்பிவைத்தும், அருகிலுள்ள விளக்குகளை அணைத்தும், ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதை உடைக்க முடியாததால் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
வங்கியுடன் செயல்பட்டுவந்த ஏடிஎம்மில் இரவு நேர காவலாளி தூங்கும் வரை காத்து நின்ற கொள்ளையன், காவலாளி தூங்கிய நிலையில் இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வங்கியிலிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 2 கிலோ தங்கம் பறிமுதல்