கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகர், சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரேஷன் அரிசி கடத்துவதாக கிழக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி உத்திரவின்படி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து சூளேஸ்வரன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி சேகரித்து சட்டவிரோதமாக கேரளா மாநிலத்திற்க்கு வாகனத்தில், 1, 050 கிலோ அரிசியை கடந்த முயன்றனர்.
இதை கண்டுபிடித்த காவல் துறையினர் அரிசியை பறிமுதல் செய்து இந்த கடத்தலில் ஈடுபட்ட கேரளா சித்தூரை சேர்ந்த சரவணன், சுபாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் கேரளா எல்லை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கும் விதமாக உணவு கடத்தல் பிரிவு கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படியும் காவல் துறையினர் ஆனைமலை ஆலாங் கடவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கேரளாவைச் சேர்ந்த ஹரிஷ், பாலாஜி ஆகியோர் டாடா சுமோவில் கேரளாவுக்கு 1.2 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நியாயவிலைக் கடைகளில் வழங்கும் அரிசி தரமாக இல்லை!