ETV Bharat / state

"டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு" - கோவை ஆட்சியர்! - Ambedkar

2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 12:23 PM IST

கோயம்புத்தூர்: தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு, திருவள்ளுவர் திருநாளில் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள்’ வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக, அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், பட்டியலின முன்னேற்றத்திற்கு சேவை செய்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படுகிறது.

எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு சேவை செய்து, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது’ ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பொது இடங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

அந்த வகையில் இந்த வருடம் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது’ குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-2024 ஆம் நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில், டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்படிவங்களை பெற்று 10.11.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.