கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதையொட்டி, அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் தூய்மை பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் ட்ரோன் மூலமாக முக்கிய பகுதிகளான டவுன் ஹால், ஒப்பனக்கார வீதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.
மேலும், 30க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் மூலம் கிருமி நாசினி மருந்துகள் சாலைகளில் தெளிக்கும் பணிகளும் நடைபெற்றன.
இதையும் படிங்க: கரோனா: சாலையில் சுற்றித்திரிந்த ஜப்பானியரால் பரபரப்பு!