கொரோனா வைரஸால் கேரளாவில் சிலர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு கேரளா எல்லையில் பொள்ளாச்சி பகுதியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி நேற்று பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் கேரளாவிலிருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் வந்த அனைத்துப் பேருந்துகளின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் ஜோதி மணிகண்டன்,"உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் தற்போது கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதிகளான கோபாலபுரம், மீனாட்சிபுரம், டாப்சிலிப் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஓட்டுநர், நடத்துநர் மூலம் பயணிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: கொரோனோ பாதிப்பு: நாகை வந்த 49 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்!