ETV Bharat / state

எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும்: அண்ணாமலை - etv bharat tamil

’தமிழ்நாட்டில் டீக்கடையில் எப்போது ரஃபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ, அன்றைக்கு என்னுடைய வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன்’ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் எங்களுக்கு தெரியும்: அண்ணாமலை

author img

By

Published : Dec 21, 2022, 6:18 PM IST

டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ, அன்றைக்கு என்னுடைய வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன்- அண்ணாமலை

கோயம்புத்தூர்: கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'தேசத்தை இதயத்தில் வைத்து நடக்கும் கட்சி பாஜக. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் இருப்பவர்கள் உடலில் சிறு குறைகளுடன் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே... திமுக வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது.

2024-ல் 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்பது இலக்கு. தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரஃபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்சின் பில்லை வெளியிடுகிறேன். ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம்சாட்டுகிறார்கள்.

2ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவிடாமல் செய்ததோ அதே போல் மீண்டும் நிகழும். 70 ஆண்டுகளாக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு அமைச்சரும் இதைப் பற்றி பேச வேண்டும். பொதுமக்கள் திமுக ஊழல் பற்றி தெரிவிக்க ஒரு website தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். ஒரே நாளில் அரசியல் புரட்சி ஏற்படுத்த உள்ளோம். 2 லட்சம் கோடி திமுக குடும்பத்தினரிடம் உள்ளது. பாஜகவிற்கு மட்டும் தான் முதலமைச்சர் குடும்பம் பற்றி பேசத் தகுதியும் தைரியமும் உள்ளது. 2 லட்சம் கோடியா, வாட்ச்சின் பில்லா என்பது தெரிந்துவிடும்.

பூத் கமிட்டி பிரதிநிதிகள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். அவர்கள் தான் நமக்கான வாக்குகளை உறுதி செய்பவர்கள். கையில் இருக்கும் பணத்தை இழந்து கட்சியை வளர்த்து வருகிறோம். நமது போராட்டங்கள் நம்மை மக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கிறது. Do or die சூழலில் நாம் உள்ளோம், இதற்கு முடிவு கட்ட இந்த தலைமுறையால் முடியும்.

2024-ல் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும். ஏனெனில், மக்கள் மனது பாஜக பக்கம் திரும்பிவிட்டது. சூழ்நிலைகளை ஓட்டாக்க வேண்டும். உண்மையான மனிதர்களை நலத்திட்டங்களை வழங்கும்போது தான் பார்க்க முடியும். விரைவில் கோவையில் பொதுக்கூட்டம் நடக்கும். 2024-ன் நிலை பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் பெறும்.

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடைபிணமாகத் தான் ஆட்சி நடத்துவார்கள். பின் ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக காலை 11:30 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் 11 மணிக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள், முதியவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்திற்கு வந்து இருந்தனர். அப்படியிருக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நண்பகல் 1.20 மணிக்கு மேடைக்கு வந்ததால் சுமார் 2 மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் அண்ணாமலைக்காக காத்திருந்தனர். இதனால் மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்திருந்த பெற்றோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படிங்க: "டிமான்ட்டி காலனி 2" - புதிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.