ETV Bharat / state

இலங்கை நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

author img

By

Published : Aug 3, 2020, 9:01 PM IST

கோவை: இலங்கை நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டச் செய்திகள்  coimbatore news today  angoda lokka case update  அங்கோடா லொக்கா
இலங்கை நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சில நாட்களுக்கு முன்பு இலங்கையிலுள்ள இணைய தளம் ஒன்றில் இலங்கையில நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா இந்தியாவில் மரணமடைந்துவிட்டதாகவும், கோவையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இலங்கை தூதரகம் மூலம் கிடைத்தத் தகவலைப் பெற்று, கோவை காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அங்கோடா லொக்காவுடன் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்த கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமானி தாஞ்சி, சிவகாமசுந்தரி ஆகியோர் அங்கோடாவை ஜூலை 3 ஆம் தேதி மருத்துவமனையில் பிரதீப் சிங் என்ற பெயரில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாராடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி உடற்கூறாய்வு செய்து இறப்புச் சான்றிதழுடன் அங்கோடாவின் உடலை அமானி தாஞ்சியிடம் ஒப்படைத்தனர். இந்தப் பெண்கள் இருவரும் தியானேஸ்வரன் என்பவரின் உதவியோடு மதுரைக்கு அங்கோடாவின் உடலைக்கொண்டு வந்து தகனம் செய்துள்ளனர்.

பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கும் தியானேஸ்வரனே உதவி செய்துள்ளார். இவையனைத்தும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவர மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், சிவகாமசுந்தரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

தியானேஸ்வரன் இன்று(ஆக.3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமானி தான்ஜி கர்ப்பமாக இருப்பதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், இவ்வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த கணவர்; அடித்துக் கொன்ற மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.